8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை: சாக்கடையில் மீட்டெடுக்கப்பட்ட சடலம்
ஹைதராபாத்தில் 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிய திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 வயது சிறுவனின் சடலம்
ஹைதராபாத்திலுள்ள சானத் நகரில் சாக்கடையில் சிறுவனின் உடல் மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அது வாசிம்கானின் மகனான, அப்துல் வாகித் என்ற 8 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது.
@Special Arrangement
அப்பகுதியிலுள்ள சீசீடிவியில் பார்க்கும் போது திருநங்கையான இம்ரான், மற்றொருவரோடு சாக்கு மூட்டையில் உடலை கொண்டு வந்து சாக்கடைக்குள் வீசியது பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குற்றவாளியான திருநங்கை இம்ரானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
கொடூரமான முறையில் கொலை
விசாரணையில் இம்ரான் 8 வயது சிறுவனை அடித்து சித்திரவதை செய்ததோடு, சிறுவனை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலையை வலுக்கட்டாயமாக நனைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
@Special Arrangement
இம்ரானுக்கு வயிறு சரியில்லை என சிறுவனின் தந்தையிடம் ORS வாங்கி கொடுத்து விட சொல்லியிருக்கிறார். அதனை கொண்டு வந்த போது சிறுவனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
சிறுவனின் தந்தை வாசிம்கான் வீட்டருகே வசிக்கும் திருநங்கை இம்ரானிடம், 5 லட்சம் ரூபாய் சீட்டு போட்டுள்ளார். கடந்த வாரம் வாசிம்கான் சீட்டை எடுத்த நிலையில், இம்ரான் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வாசிம்கானின் 8 வயது மகன் காணாமல் போயுள்ளார்.
@etvbharat.com
அதற்கு பலிவாங்கவே சிறுவனை கொலை செய்ததாக, திருநங்கை இம்ரான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.