நாஜிகளால் திருடப்பட்ட “Portrait a Lady” இத்தாலிய ஓவியம்: 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி வீரர்களால் திருடப்பட்ட இத்தாலிய ஓவியம் அர்ஜெண்டினாவில் உள்ள விற்பனை தளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டர்டாமில் இருந்த யூத கலைப் பொருள் வியாபாரியிடம் இருந்து இந்த இத்தாலிய ஓவியம் திருடப்பட்டுள்ளது.
கியூசெப்பே கிஸ்லாண்டி என்ற கலைஞரால் வரையப்பட்ட “The Portrait a Lady” என்ற இந்த ஓவியம், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தென் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த நாஜி அதிகாரியின் வீட்டில் தொங்கவிடப்பட்டு இருந்துள்ளது.
போர்க்காலத்தில் காணாமல் போன இந்த ஓவியம், நாஜி அதிகாரியின் மகள் சம்பந்தப்பட்ட வீட்டை விற்கும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாக்ஸ் கவுட்ஸ்டிக்கர் கலைப்பொருட்கள்
நூற்றாண்டு பழமை கொண்ட இந்த ஓவியம் ஜாக்ஸ் கவுட்ஸ்டிக்கர்(Jacques Goudstikker) என்ற கலைப் பொருள் வியாபாரியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாஜி படைகளிடம் இருந்து யூதரான ஜாக்ஸ் கவுட்ஸ்டிக்கர் நெதர்லாந்திலிருந்து தப்பிக்க முயன்ற போது கடல் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரித்தானியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜாக்ஸ் கவுட்ஸ்டிக்கர் தப்பி ஓடிய பிறகு அவரிடம் இருந்த 1,100க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் நாஜி அதிகாரிகளால் கட்டாய விற்பனையின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |