உல்லாச கப்பலில் 800 பயணிகளுக்கு கோவிட் தொற்று: பீதியில் அவுஸ்திரேலிய மக்கள்
அவுஸ்திரேலியாவில் உல்லாசப் பயணக் கப்பல் ஒன்றில் நூற்றுக்கணக்கானோருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 800 பயணிகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கார்னிவல் அவுஸ்திரேலியாவின் மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக் கப்பல், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் தலைநகரான சிட்னியில் நிறுத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொற்று வெடிப்புக்கு மாநில சுகாதார அதிகாரிகளால் "அடுக்கு-3" ஆபத்து மதிப்பீடு வழங்கப்பட்டது, இது அதிக அளவு பரவுவதைக் குறிக்கிறது.
Photo by MUHAMMAD FAROOQ/AFP via Getty Images
உள்துறை அமைச்சர் உறுதி
இதனால், நியூ சவுத் வேல்ஸ் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், கோவிட்-19 நெறிமுறைகளை போதுமானதாக இருப்பதாக அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Clare O’Neil பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவமானது, 2020-ல் ரூபி பிரின்சஸ் பயணக் கப்பலில் ஏற்பட்ட தொற்றுநோய் நிகழ்வுடன் ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வெடிப்பின் விளைவாக நியூ சவுத் வேல்ஸில் 914 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன மற்றும் 28 பேர் இறந்தனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ ஊழியர்களிடமிருந்து கவனிப்பைப் பெறுகிறார்கள் என்று சர்வதேச ஓய்வு நிறுவனமான கார்னிவல் கார்ப்பரேஷன் & பிஎல்சியின் துணை நிறுவனமான கார்னிவல் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.