101 வயது தந்தையின் சடலத்துடன் வாழ்ந்து வந்த 82 வயது முதியவர்
நெதர்லாந்தில் 101 வயதான தந்தையின் சடலத்தை 18 மாதங்களாக பிரிட்ஜுக்குள் பதுக்கி வைத்திருந்த 81 வயது முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தையை இழக்க விரும்பமில்லை
நெதர்லாந்தில் லாண்ட்கிராஃப் நகரில் வசிக்கும் 82 முதியவர், தனது இறந்த தந்தையின் உடலை 18 மாதங்கள் உறைவிப்பான் பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு பதப்படுத்தி வைப்பதன்மூலம், தனது தந்தையுடன் தொடர்ந்து உரையாட முடியும் என்று அவர் நம்பியுள்ளார். மேலும், தனது தந்தையை இழக்க விரும்பவில்லை என அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
Sky News
விசாரணை
101 வயதுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அந்தக் குடும்ப வைத்தியர் ஒருவர் கவலை தெரிவித்ததை அடுத்து பொலிஸார் திடீர் சோதனை நடத்தி அவரது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், தற்போதைக்கு முறைகேடு நடந்ததாக சந்தேகிக்கும்படி எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
லாண்ட்கிராஃப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நபரின் மரணம் குறித்தும், உடல் எதற்காக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் நலன் கருதி, கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு இடையேயான உறவு குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை." என்று தெரிவித்தனர்.
82 வயது முதியவர் சிறையில் தடுத்து வைக்கப்படுவாரா?
இதற்கிடையில், சீர்குலைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் நடந்த வீட்டை சுத்தம் செய்ய 82 வயது முதியவருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து சுதந்திரமாக வாழ முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர்.
நெதர்லாந்தில் 2015-ல் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நபர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தனது இறந்த தாயின் உடலை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த நபர் அதனை காலமும் தனது தாயின் ஓய்வூதியம் மற்றும் சமூக உதவித் தொகைகளை வாங்கி செலவுசெய்துகொண்டிருந்தார். அவர் இறுதியில் கைது செய்யப்பட்டு, 40,000 யூரோக்களை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டது.