ரஷ்யர்களின் ஆதரவை அள்ளிய புடின்: புதிய ஆய்வு முடிவுகளால் பரபரப்பு!
ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த நாட்டின் ஜனாதிபதி புடின் மற்றும் அவரது நடவடிக்கைகளை தற்போது 83 சதவிகித ரஷ்ய மக்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் தாக்குதலை கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் முன்னெடுத்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது ஜனாதிபதி புடின் மற்றும் அவரது நடவடிக்கையை கூடுதலாக 10 சதவிகித ரஷ்ய மக்கள் ஆதரிப்பதாக ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன.
அதன் அடிப்படையில், புடின் மற்றும் அவரது நடவடிக்கைகளை தற்போது 83 சதவிகித ரஷ்ய மக்கள் ஆதரிப்பதாக ரஷ்யாவின் சுயாதீன சமூகவியல் ஆராய்ச்சி அமைப்பான லெவாடா மையம் தெரிவித்துள்ளது.
⚡️ Poll: 83% of Russians support Putin.
— The Kyiv Independent (@KyivIndependent) March 30, 2022
Russians support for the actions of their president rose by more than 10% compared to the figures in January or February.
Source: Russia's independent sociological research organization Levada Center
இது கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா, அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி புடினின் புதிய ஓய்வூதிய நடைமுறை மற்றும் ஓய்வூதிய வயது உயர்வு போன்ற அறிவிப்புகளின் காரணங்களால் சரிவை சந்தித்த நிலையில், தற்போது புடினின் மீதான ஆதரவு மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த 2000-மாவது ஆண்டு ஜனாதிபதி புடின் அந்த நாட்டின் பிரதமராக இருந்த போது 88 சதவிகித ரஷ்ய மக்கள் அவருக்கான அதிகபட்ச ஆதரவை வழங்கி இருந்தனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அவருக்கான ஆதரவு அதிகரித்து இருப்பது ஒருபுறம் இருக்க, ரஷ்யாவில் கடந்த 2020 ஆண்டு புடின் கொண்டுவந்த ஜனாதிபதி சட்ட திருத்தத்தின் அடிப்படையில் அவர் வரும் 2036ம் ஆண்டு வரை அதிகாரத்தில் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
போரின் உண்மை நிலைமை இதுவே... யாரையும் நம்ப தயாராக இல்லை: ஜெலென்ஸ்கி அறிவிப்பு!