ஒரே நாளில் 85,663 பேருக்கு தொற்று உறுதி; பாதிப்பு பட்டியலில் 2-வது இடத்தில் பிரேசில்!
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 275,000-த்தை தாண்டியுள்ளது என்று அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், பிரேசில் 85,663 புதிய கோவிட் -19 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,363,389-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2,216 பேர் இறந்துள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 275,105-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக தொற்றுநோய் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவில் 11,308,846 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், 29.32 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நோயாளிகளைக் கொண்ட அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக முதல் இடத்தில் உள்ளது.