பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.

நேற்று, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றிரவு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
9 குழந்தைகள் உயிரிழப்பு
கோஸ்ட் மாகாணத்தில் உள்ள கெர்பாஸ் மாவட்டத்தின் முகல்கே பகுதியில் உள்ள வீட்டின் மீது குண்டு வீசப்பட்டதில், 9 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் காயமடைந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள்அதிகரித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஜெனரல் ஷஃப்கத்துல்லா கான், மூத்த ஆப்கானிய மாகாணத் தலைவர் நங்கர்ஹார் ஆளுநர் முல்லா முகமது நயீம் அகுந்தை சந்தித்த போது இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது.
எல்லை தாண்டிய தாக்குதல்களைத் திட்டமிடவும் நடத்தவும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்திலிருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அதனை மறுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |