மியான்மரில் பொலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் பலி! வலுக்கும் போராட்டம்
இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இன்று மியான்மர் பாதுகாப்புப் படையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 9 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Mandalay-வில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முக்கிய நகரமான Yangon-ல் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டதாக Monywa Gazette மற்றும் ஒரு சாட்சியின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மேலும், மத்திய நகரமான Myingyan-ல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மாணவ போராளி Moe Myint Hein (25) கூறினார். Moe Myint Hein-க்கு காலில் குண்டடி பட்டுள்ளது.
பிப்ரவரி-1 ம் தேதி நடந்த ஆட்சி கவிழ்ப்பிலிருந்து குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுவருக்கிறது. இதனால் பல உலக நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பை மியான்மர் இராணுவம் எதிர்கொண்டுவருகிறது.
இருப்பினும் மியான்மர் இராணுவம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. நாட்டின் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றிப்பெறுபவர்களிடன் அதிகாரத்தை ஒப்படைப்படைப்பதாக இராணுவம் முன்பு அறிவித்திருந்தது.