மொத்தமாக தரைமட்டமான 9 மாடி குடியிருப்பு: உடல் நசுங்கி பலியான பலர்
கெய்ரோவின் கிழக்கில் 9 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பில், உறுதியான காரணம் வெளியாகாத நிலையில், தொடர் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்திய தலைநகர் கெய்ரோவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்ததுள்ளது.
இதில் குறைந்தது 8 பேர் இடிபாடுகளில் சிக்கி கொல்லப்பட்டதுடன் 29 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். சனிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
மட்டுமின்றி, மீட்பு குழுவினர், மின் விளக்கு வெட்டத்தில் தேடுதல் நடவடிக்கையை இரவு வெகு நேரம் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
எகிப்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுவது ஒன்றும் புதிதான நிகழ்வல்ல.
அனுமதியின்றி அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள்,
பழைய கட்டிடங்களின் மோசமான பராமரிப்பு மற்றும் கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை மோசமாக அமல்படுத்துவது உள்ளிட்டவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.