சாக்லேட் வாங்காவிட்டாலும் பரவாயில்லை.., நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை கொடுத்த 9 வயது சிறுவன்!
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 9 வயது சிறுவன், தான் சேகரித்து வைத்திருந்த மொத்த பணத்தை நன்கொடையாக அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த சிறுவன்
துருக்கியைச் சேர்ந்த அல்பார்ஸ்லான் எஃபே டெமிர் (Alparslan Efe Demir) எனும் 9 வயது சிறுவன் கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தார்.
டெமிர் இப்போது துருக்கியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளுக்கு பங்களித்துள்ளார். கடந்த வாரம் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முழுவதுமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
TRT World
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடமேற்கு தாஸ் மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறுவன் டெமிர் மீட்கப்பட்டான். துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சி (AFAD) மூலம் அமைக்கப்பட்ட கூடாரத்தில் சிறுவன் பராமரிக்கப்பட்டு வந்தான்.
நான் சாக்லேட் வாங்காவிட்டாலும் பரவாயில்லை..,
தான் சேமித்த பணத்தை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய சிறுவன், “டுஜ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் மிகவும் பயந்தேன். நமது நகரங்கள் பலவற்றில் நிலநடுக்கம் பற்றி கேள்விப்பட்டபோது எனக்கும் அதே பயம் இருந்தது. பெரியவர்கள் கொடுத்த பாக்கெட் மணியை அங்குள்ள குழந்தைகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன்,'' என்ரூ கூறி நெகிழவைத்துள்ளான்.
“நான் சாக்லேட் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. அங்குள்ள குழந்தைகள் குளிர் மற்றும் பசியுடன் இருக்கக்கூடாது. அங்குள்ள குழந்தைகளுக்கு எனது உடைகள் மற்றும் பொம்மைகளை அனுப்பி வைப்பேன்,'' என்றான் சிறுவன்.
9-year-old Alparslan Efe Demir has donated his entire piggy bank savings to help people affected by #TurkeyEarthquake
— Anupam Bordoloi (@asomputra) February 7, 2023
“It is okay if I do not buy chocolate here. Children there should not be cold or hungry...,” he said in a letter.https://t.co/czScHoZsaz pic.twitter.com/a4h43a2IlK
உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள்
சிறுவன் எவ்வளவு பணம் கொடுத்துள்ளான் என்பதை விட, தன்னைப் போலவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய முன்வந்த அவனது பண்பிற்காகவும், எண்ணத்திற்காகவும் அல்பார்ஸ்லான் எஃபே டெமிரருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 28,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.