வெள்ளத்தில் தப்பிய 900 விஷப்பாம்புகள்., அச்சத்தில் சீனாவின் குவாங்சி மக்கள்
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், ஹெங்சோ நகரில் உள்ள ஒரு பாம்பு பண்ணை சேதமடைந்தது.
இதனால் சுமார் 800-900 பாம்புகள், அதில் விஷப்பாம்புகள் (நாகப்பாம்பு) உட்பட, தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 6-ஆம் திகதி காலை ஏற்பட்ட வெள்ளத்தில், பாம்பு பண்ணை முழுமையாக அழிந்தது. இதனால் பல பாம்புகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பரவியுள்ளன. சில கிராம மக்கள் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளத்தால் Liulan மற்றும் Yunbiao அணைகள் உடைந்ததால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் சிறிய அளவிலான பாம்பு பண்ணைகளில் இருந்த பாம்புகள் பெருமளவில் வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.
உள்ளூர் மக்கள், தன்னார்வமாக “பாம்பு பிடிக்கும் குழு” ஒன்றை அமைத்து, வீடு வீடாகச் சென்று பாம்புகளை பிடித்து வருகின்றனர். அவர்கள் மீன்பிடி கருவிகள் மற்றும் மின்சார கருவிகளைப் பயன்படுத்தி பாம்புகளை பிடிக்கின்றனர்.
Around 900 snakes, including venomous cobras, had escaped from a farm in a village in Hengzhou, South China's Guangxi Zhuang Autonomous Region after it was damaged by flooding that has devastated the region, with some residents suffering snakebites, media reported. The local city… pic.twitter.com/sdYzdLMMeO
— Global Times (@globaltimesnews) July 7, 2026
பெரும்பாலான பாம்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தற்போது சில பாம்புகள் மட்டுமே குப்பை மற்றும் வெள்ள நீரில் மிதந்து காணப்படுகின்றன. இத்தனிடையே, பாம்புகளை மக்கள் தாங்களே பிடிக்க முயற்சிக்க வேண்டாம். உடனடியாக கிராமக் குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வெள்ளம் Maysak புயல் காரணமாக ஏற்பட்டதாகவும், தொடர்ந்து பெய்த மழையால் குவாங்சி மாகாணம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |