கார் ஓட்டுநருக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.9,000 கோடி: ஆடிப்போன வங்கி நிர்வாகம்
சென்னை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் சுமார் 9,000 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரூ.9000 கோடி
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநராக உள்ள ராஜ்குமாரின் என்பவரின் வங்கி கணக்கில் சுமார் ரூ. 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மிகப்பெரிய தொகையை ஆட்டோ ஓட்டுநரின் வங்கி கணக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக வரவு வைத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 1ம் திகதி மதியம் 3 மணியளவில் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் இந்த தொகையானது டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தங்களுடைய வழக்கறிஞர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர் தனது நண்பருக்கு அனுப்பிய ரூ.21,000-ஐ தவிர மீதியுள்ள முழுத் தொகையையும் வங்கி திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நண்பருக்கு அனுப்பிய 21,000 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டாம் என்றும், அவருக்கு வாகன கடன் தருவதாகவும் வங்கி தரப்பில் இருந்து சமரசம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |