10,000க்கும் அதிகமானோரை படுகொலை செய்த குற்றத்துக்காக 95 வயது பெண் மீது வழக்குப் பதிவு!
இரண்டாம் உலகப்போரின் போது நாஜி முகாமில் 10,000 பேர் படுகொலை செய்யப்பட்டற்காக 95 வயதாகும் முன்னாள் பெண் செயலாளர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
படுகொலைக்கு குற்றம்சாட்டப்பட்ட 95 வயதான பெண் 1943 மற்றும் 1945 ஆண்டுகளுக்கு இடையில், அப்போது நாஜி ஆக்கிரமித்த போலந்தில் Danzig பகுதியில் இருந்த Stutthof முகாமில் ஸ்டெனோகிராபர் மற்றும் முகாம் தளபதியின் செயலாளராக பணிபுரிந்தார். Danzig தற்போது Gdansk என அழைக்கப்படுகிறது.
வழக்குரைஞர்கள் அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் பிராந்திய ஒளிபரப்பாளர் NDR அவரை ஜேர்மனியில் உள்ள ஹாம்பர்க்கின் வடக்கில் ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் Irmgard F என்று அடையாளபடுத்தியுள்ளனர்.
ஜூன் 1943 மற்றும் ஏப்ரல் 1945-க்கு இடையில், யூத கைதிகள், போலந்து கட்சிக்காரர்கள் மற்றும் சோவியத் ரஷ்ய போர் கைதிகள் உள்ளிட்ட 10,000-க்கும் அதிகமானோர் Stutthof முகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலைக்கு இவர் உதவியாக இருந்ததாகவும், மேலும் பல கொலை முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் அவர் 21 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால், அவர் சிறுமி (Minor) என கருதப்படுவார் என வடக்கு நகரமான Itzehoe-வை சேர்ந்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
இப்போது அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் வசிக்கும் சாட்சிகளை நேர்காணல் செய்தது மட்டுமல்லாமல், மிகவும் விரிவான விசாரணையை புலனாய்வாளர்கள் மேற்கொண்டதையடுத்து, அப்பெண்ணுக்கு படுகொலையில் உறுதியான பங்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கைத் திறக்கலாமா என்று நீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும் என்று வழக்குரைஞர்கள் Peter Mueller-Rakow கூறியுள்ளனர்.
மேலும், படுகொலை நடந்த நேரத்தில் அவரது வயது காரணமாக, அவர் சிறார் நீதிமன்றத்தை எதிர்கொள்வார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு முன்னாள் Stutthof முகாம் காவலரான Bruno Dey (93), படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஹாம்பர்க்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அவரது விசாரணையில் அவர் குற்றத்தை பொத்துக்கொண்டு, Holocaust-ல் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

