நேபாளத்தின் நம்பிக்கை சின்னமாக உயிர் பிழைத்த 97 வயது பாட்டி
97-year-old survivor becomes Nepal flood symbol: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 97 வயது பாட்டி உயிர் பிழைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குனா மாயா போஹாரா
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், 97 வயதான குனா மாயா போஹாரா (Guna Maya Bohara) எனும் பாட்டி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளத்தால் இடிந்து விழுந்த பராமரிப்பு இல்லத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த போஹாராவை மீட்க, நேபாள பொலிஸ் மற்றும் இராணுவம் நான்கு மணி நேரம் போராடினர்.
இறுதியில், எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தின் பக்கெட் மூலம் அவரை வெளியே கொண்டு வந்தனர். சேற்றில் மூழ்கிய உடைகள், சோர்வான முகம், அனைத்தும் வெள்ளத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.
வீராங்கனை போல..
அவரது பேரன் தீபக் போஹாரா, “அவர் போரில் வெற்றி பெற்று திரும்பும் வீராங்கனை போல இருந்தார்” என்று BBC Nepali-க்கு தெரிவித்தார்.
இந்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி, நேபாள வெள்ளத்தின் அடையாள முகமாக மாறியுள்ளது.
திருநங்கை அனயா பங்கர் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாட அனுமதி - தென்னாப்பிரிக்க வீராங்கனை எதிர்ப்பு
நேபாளத்தில் தற்போது 676 பேர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
நேபாள நிதி அமைச்சர், நாட்டை மீண்டும் கட்டமைக்க 4-5 பில்லியன் டொலர் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.
போஹாராவின் உயிர் பிழைத்த கதை, பேரழிவின் நடுவே நம்பிக்கையின் சின்னமாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |