தமிழகத்தில் 9ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி! தொடரும் சோகம்
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் குறித்த மாணவி பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த மாணவி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அச்சத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
purdueglobal.edu