இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் கண்டுபிடிப்பு!
இத்தாலியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்று அகழ்வார் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான Pompeii-க்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர சடங்கு தேரை கண்டுபிடித்தனர்.
வெண்கல மற்றும் தகரத்தால் உருவாக்கப்பட்டுள்ள அந்த தேரை அதன் மர எச்சங்கள் மற்றும் கயிறுகளின் முத்திரையுடன், கிட்டத்தட்ட முழுமையாக அப்படியே கணடெடுத்துள்ளனர்.
வடக்கு Pompeii நகரத்தின் Civita Giuliana பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் இந்த தேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில், மூன்று குதிரைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தேர் வெண்கல மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு மர பேனல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், வெண்கல மற்றும் தகரம் பதக்கங்களில் பொறிக்கப்பட்ட பல்வேறு கதைகள் உள்ளன.
மேலும், இதில் ரோமானிய காலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட பொருளான இலையுதிர் ஆங்கில ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாக்கள், அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்கள் போன்ற சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த வகை தேர் இதற்கு முன்னர் இத்தாலியில் காணப்படவில்லை, அதற்கு பதிலாக வடக்கு கிரேக்கத்தில் உள்ள திரேஸிலிருந்து கிடைத்த கண்டுபிடிப்புகளை ஒத்திருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில், Pompeii நகரத்தில் பண்டைய சிற்றுண்டி கடை, பிரகாசமான ஓவியங்கள் மற்றும் 2,000 ஆண்டுகள் பழமையான தெரு உணவின் தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த கவனமாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.


