விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டு! இத்தனை லட்சத்திற்கு ஏலம்
இந்திய மாநிலம், தெலங்கானாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.
21 கிலோ எடையுள்ள லட்டு
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாலபூர் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
அப்போது, விழாவின் ஒரு பகுதியாக சுத்தமான நெய் மற்றும் உலர்ந்த பழங்களை கொண்டு அதிக எடையிலான லட்டு தயார் செய்து விநாயகருக்கு படைக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், லட்டுக்கு தங்கமுலாம் பூசப்பட்டு வெள்ளி கிண்ணத்தின் மேல் விநாயகருக்கு வைக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டுவின் எடை மதிப்பு 21 கிலோ ஆகும்.
ரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு
இந்த கோவிலில், கடந்த 30 ஆண்டுகளாக பூஜை செய்யப்படும் லட்டுவை கோயில் நிர்வாகத்தினர் ஏலம் விடுவார்கள்.
அதே போல, இந்த ஆண்டும் உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் என 36 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆரம்ப விலையாக ரூ.1116 என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஏலத்தின் முடிவில், ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த தசரி தயானந்த் ரெட்டி என்பவர் ரூ.27 லட்சத்திற்கு லட்டுவை ஏலத்திற்கு வாங்கினார்.
அவர், இதனை அவரது பெற்றோருக்கு பரிசளிப்பதாக கூறினார். முதல்முறையாக, கடந்த 1994 ஆம் ஆண்டு இந்த கோயிலின் லட்டுவை விவசாயி ஒருவர் ரூ.450 க்கு ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |