மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த நாடு! எத்தனை நாட்கள் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் தீவிரமாக ஒரு சில நாடுகளில் பரவி வரும் நிலையில், வங்கதேச அரசு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது.
ஆசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால், அங்கு கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது.
இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பின் வைரஸ் பரவால் ஏற்படும் பலி மெல்ல மெல்ல குறைந்த பின், நாட்டில் தளர்வுகள் படிப் படியாக தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இதன் அணை நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக வருகிற 5-ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.
இதுவரை வங்காளதேசத்தில் 6,24,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,155 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.