வடகொரியாவுக்கு 48 மணி நேர கெடு விதித்த பிரபல ஆசிய நாடு: திடீரென இறுகும் மோதல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வட கொரிய தூதரக அதிகாரிகளும் அவர்களின் உதவியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை மூடுவதற்கான வட கொரிய அரசாங்கத்தின் முடிவால் தற்போது மலேசிய அரசாங்கம் இந்த முடிவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017 முதல் பியோங்யாங்கில் உள்ள மலேசிய தூதரகம் செயல்பாட்டில் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், வடகொரிய நாட்டவரான Mun Chol-myong என்பவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டது எனவும், அதில் விதி மீறல் ஏதும் இல்லை எனவும் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
மட்டுமின்றி, Mun Chol-myong என்பவருக்கு சட்டத்தின் உதவி கிடைக்கவும், அவர் குடும்பத்தினரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், அவருக்கான உரிமைகள் அனைத்தும் உரிய முறையில் பின்பற்றப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வடகொரியாவின் பதில் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியாக இல்லை என குறிப்பிட்டுள்ள மலேசிய அதிகாரிகள்,
அதனாலையே வடகொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அனைவரையும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.