300,000 கடந்த மரணங்கள்! கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் நாடு
பிரேசிலில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300,000-த்தை கடந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து கொரோனாவால் உலகின் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் மாறியுள்ளது.
அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனால் பிரேசிலின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 300,685-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், நேற்று ஒரே நாளில் (புதன்கிழமை) புதிதாக 89,992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,220,011-ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அமெரிக்காவிற்கு பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
212 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில், இப்போது அதன் மக்கள்தொகையில் சுமார் 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கவேண்டும் என்ற அதன் இலக்கை நோக்கி நகர மிகவும் சிரமப்பட்டு வருகிறது.



