குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த பொலிஸார்
குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்கு லட்சக்கணக்கில் பொலிஸார் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அபராதம் விதித்த பொலிஸார்
பொதுவாக கார் அல்லது இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் பொலிஸார் அபராதம் விதிப்பார்கள். ஆனால், இந்த நாட்டில் நபர் ஒருவர் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்கு 2,52,194 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தி கார்டியன் அறிக்கையின்படி, 55 வயதான அவர், மத்திய ஸ்வீடனில் உள்ள ராட்விக் என்ற நகரத்தில் நடந்த கிளாசிக் கார் நிகழ்வில் ட்ரோன் செலுத்தியிருக்கிறார்.
இந்த நிகழ்வை கண்காணிக்க பொலிஸார் சென்றபோது அங்கு பறக்கும் ட்ரோனைக் கண்டனர். பின்னர் அவர்கள், ட்ரோனைக் கட்டுப்படுத்தும் நபரை கண்டுபிடித்தனர்.
அப்போது ட்ரோன் இயக்கிய நபருடைய இரத்த ஓட்டத்தில் ஒவ்வொரு 1000 பங்குக்கும் 0.69 பங்கு ஆல்கஹால் இருந்தது. அவர் ட்ரோனை பறக்கவிட்டதை ஒப்புக்கொண்டார்.
ஸ்வீடிஷ் சட்டத்தின்படி, 1,000 பங்குகள் இரத்தத்தில் 0.2 பங்குகளுக்கு மேல் ஆல்கஹால் அளவு இருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் 1.0 க்கு மேல் இருந்தால் அது கடுமையான குற்றமாகும்.
மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்வீடனில் மது அருந்தி வாகனம் ஓட்டும் சட்டங்கள் கடுமையாக உள்ளன. இங்கிலாந்தில் மது வரம்பு 0.8 ஆகவும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 0.5 ஆகவும் உள்ளது.
மறுபுறம், ருமேனியா மற்றும் ஹங்கேரி வாகனம் ஓட்டும்போது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளன.
முதலில் ட்ரோனை இயக்கிய நபர் தான் அதை பறக்க விடவில்லை என்றும், தனது நண்பர் பறக்க விட்டார் என்றும் கூறினார். ஆனால், பொலிஸார் வந்தபோது அவரது நண்பர் அங்கு இல்லை.
இதனால் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 32,000 SEK ($2,912) அபராதம் விதிக்கப்பட்டது. இது 80 நாட்களில் தினசரி அபராதமாக 400 SEK ($36.40) செலுத்த வேண்டும்.
ஸ்வீடனில் குடிபோதையில் ஆளில்லா விமானத்தை ஓட்டியதற்காக ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாக கருதப்படுகிறது.
அதேபோல, நீதிமன்றத்திலும் குடித்துவிட்டு ட்ரோன் ஓட்டிய குற்றத்துக்காக இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு விமானம். அது தானே பறந்தாலும், தரையில் யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் கீழே விழுந்து யாராவது காயமடைய வாய்ப்பு உள்ளது என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |