திருநங்கையை பெண் என ஏமாற்றி திருமணம் செய்து வைத்த நண்பன்! கடும் கோபத்தில் இளைஞர் வெறிச்செயல்
இந்தியாவில் திருநங்கையை பெண் என்று ஏமாற்றி கல்யாணம் செய்து வைத்த நண்பனை ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் Kanpur Dehat மாவட்டத்தின் கணேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் நரேன் என்ற வாலிபர் நீண்ட நாட்களாக கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அதனால் அவர் தன்னுடைய நண்பர் கைலாஷ் நாத் என்பவரிடம் சென்று திருமணம் செய்துகொள்ள தனக்கு ஒரு நல்ல மணமகளை ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
அதற்காக தன்னுடைய பூர்வீக நிலத்தை விற்று 3 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக்கொண்ட கைலாஷ், மணப்பெண்ணாக ஒரு திருநங்கையை எற்பாடு செய்துள்ளார்.
நரேனிடம் அவரை ஒரு பெண் என்று கூறி ஏமாற்றியுள்ளார், மேலும் அவர் ஒரு ஏழை குடும்பத்து பெண் என்றும், அதனால் அவரே நகைகளை போட வேண்டுமென்று கூறியுள்ளார்.
இருவருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு மணமக்கள் இருவரும் விருந்துக்கு ஒரு காரில் சென்றுகொண்டிருந்த போது அந்த மணமகள் தான் போட்டிருந்த நகைகளையோடு தப்பியோடி விட்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த நரேன், தனது மாற்றோரு நண்பரின் உதவியுடன், அவருக்கு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த கைலாஷை அடித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொலை பற்றி பொலிஸுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, தற்போது நரேன் மற்றும் அவரது நண்பர் ரகுவீர் பால் என்பரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
