பிரான்சில் கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
பிரான்சில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு எரிபொருள் விலையில் தள்ளுபடியும், குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு எரிவாயு கட்டணத்தில் 100 யூரோக்கள் உதவித்தொகையும் வழங்க பிரான்சின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் முடிவு செய்துள்ளார்.
TotalEnergies குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்த இரட்டை நடவடிக்கை இரண்டு பிரிவினருக்கு உதவும் வகையில் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, குறைந்த வருவாய் கொண்டவர்களில் Total நிறுவனத்தில் தங்கள் வீட்டுத் தேவைக்காக எரிவாயு வாங்குவோருக்கும், கிராமப் பகுதிகளில் வாழ்வோரில் அந்நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவோருக்கும்..
ஏற்கனவே அரசு அறிவித்துள்ள 100 யூரோக்கள் உதவித்தொகையுடன், தற்போது TotalEnergies குழுமமும் இந்த உதவியை செய்ய முடிவு செய்துள்ளது.
பெட்ரோல்/டீசல் விலை
அடுத்த மூன்று மாதங்களுக்கு, 6,000 பேருக்கு குறைவான மக்கள் வாழும் நகரங்களில் அமைந்துள்ள Total நிறுவன எரிபொருள் நிலையங்களில், 50 லிற்றர் எரிபொருள் நிரப்புவோருக்கு ஒவ்வொரு முறையும் 5 யூரோக்கள் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சலுகை, இன்று முதல், அதாவது பிப்ரவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.
வீட்டுக்கான எரிவாயு விலை
Total நிறுவனத்திலிருந்து வீட்டுக்கான எரிவாயு வாங்கும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு, அடுத்து வாங்கும் எரிவாயு விலையில், 100 யூரோக்கள் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சலுகைகளால் 200,000 பேர் பயனடைவார்கள். இதனால் Total நிறுவனத்துக்கு ஆகும் செலவு 20 மில்லியன் யூரோக்கள் ஆகும்.