மாயமான மனைவியை தேடிச் சென்ற கணவன்: பாம்பின் வாயிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கால்கள்
இந்தோனேசியாவில், காணாமல் போன தன் மனைவியைத் தேடிச்சென்ற ஒருவர், ராட்சத பாம்பு ஒறு தன் மனைவியை விழுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மாயமான மனைவியை தேடிச் சென்ற கணவன்
இந்தோனேசியாவிலுள்ள Siteba என்னும் கிராமத்தைச் சேர்ந்த Siriati (30) என்னும் பெண், நேற்று காலை, சந்தைக்கு செல்வதற்காக, தன் சகோதரரை அழைப்பதற்காக சென்றுள்ளார்.

Credit: ViralPress
ஆனால், அவர் இன்னமும் வந்து சேரவில்லை என அவரது சகோதார் Siriatiயின் கணவரான Adiansya (30)ஐ மொபைலில் அழைத்துக்கூற, மனைவியைத் தேடி புறப்பட்டுள்ளார் அவர்.
வழக்கமாக மனைவி நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து சென்ற அவர், வழியில் ஓரிடத்தில் தன் மனைவியின் காலணிகள் கிடப்பதைக் கவனித்துள்ளார்.

Credit: ViralPress
அதிரவைத்த காட்சி
அக்கம்பக்கத்தில் மனைவியைத் தேடும்போதுதான் அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியைக் கண்டுள்ளார் Adiansya. 30 அடி நீள ராட்சத மலைப்பாம்பொன்றின் வாயிலிருந்து இரண்டு மனிதக்கால்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட அவர், அது தன் மனைவிதான் என்பது தெரிந்ததும், உடனடியாக அந்த பாம்பைக் கொன்று தன் மனைவியைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

Credit: ViralPress
ஆனால் Siriati ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். அந்த பாம்பு Siriatiயைக் கொத்தி, அவரை சுற்றிக்கொண்டு, இறுக்கி, பின் அவரை விழுங்கிக்கொண்டிருக்கும்போதுதான் அவரது கணவர் அவரைக் கண்டுபிடித்துள்ளார். மறுநாள் Siriatiயின் உடல் அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதமும் Siriatiயின் வீட்டின் அருகிலேயே 50 வயதுப் பெண்ணொருவர் மலைப்பாம்பு ஒன்றினால் உயிருடன் விழுங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Credit: ViralPress

Credit: ViralPress

Credit: ViralPress

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |