தனது 3 குழந்தைகளுக்கு தான் உண்மையான தந்தையா என அறிய DNA பரிசோதனை செய்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மனைவி கூறிய உண்மை
நைஜீரியாவை சேர்ந்த நீதிபதி ஒருவர் முதல் மனைவி மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் தான் தந்தை கிடையாது என்பதை DNA பரிசோதனை மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
Okorodas என்பவர் நீதிபதியாக உள்ளார். இவருக்கும் Celia Juliet Ototo என்ற பெண்ணுக்கும் திருமணமான பின்னர் மூன்று பிள்ளைகள் பிறந்தது.
இந்த நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் விவாகரத்து பெற்று 11 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர்.
இதன் பின்னர் Okorodas இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் முதல் மனைவியின் மூன்று பிள்ளைகளுக்கான கல்வி செலவை அவர் ஏற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் Okorodasக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, Celiaவுக்கு பிறந்த மூன்று பிள்ளைகளுக்கு அவர் தந்தையில்லை என்ற செய்தி தான் அது.
இதை கேட்டு குழப்பமடைந்த அவர் DNA பரிசோதனை செய்ய முடிவு செய்தார்.
ஆனால் கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா அச்சம் இருந்ததால் அவரால் பரிசோதனை செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் கடந்தாண்டு இறுதியில் DNA பரிசோதனையை Okorodas மேற்கொண்ட நிலையில் அதன் முடிவில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதன்படி மூன்று பிள்ளைகளுக்கும் அவர் தந்தையில்லை என்பது உறுதியானது.
இதை தொடர்ந்து Celia மீது மோசடி புகாரை அவர் கொடுத்தார். இது குறித்த விசாரணையின் முதலில் Okorodas தான் தனது 3 பிள்ளைகளுக்கும் தந்தை என Celia கூறினார்.
ஆனால் பின்னர், வேறு நபரின் மூலம் தான் மூன்று குழந்தைகளும் பிறந்தது என்பதை ஒப்பு கொண்டுள்ளார்.
இதனிடையில் அந்த மூவரின் கல்வி செலவை Okorodas தொடர்ந்து கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
