புடினையே காக்க வைத்த ஒரு நாட்டின் தலைவர்: இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு பழிக்குப் பழி?
உலகத்தையே பதறவைத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினையே ஒரு நாட்டின் தலைவர் சிறிது நேரம் காக்கவைத்துவிட்டார்.
அந்த தலைவர், துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan!
ஈரான், துருக்கி மற்றும் ரஷ்ய தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக ஈரானில் கூடியுள்ள நிலையில், துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டகானை சந்திக்கும் முன்புதான் புடின் இப்படி காக்கவைக்கப்பட்டிருக்கிறார்.
கமேராக்கள் தன் முகத்தையே போகஸ் செய்துகொண்டிருக்க, அசௌகரியமாகவும் சலிப்பாகவும் உணர்ந்த புடின், எர்டகான் தன்னை நோக்கி வருவதைக் கொண்டதும் தோள்களை மேல் நோக்கி அசைத்துக்கொண்டு, பிறகு புன்னகைத்தாலும், கமெராக்களுக்கு இருவரும் போஸ் கொடுக்கும்போது முகத்தை சுளித்துக்கொண்டாராம்.
Those 50 seconds that Erdogan made Putin wait, looking frazzled in-front of cameras say plenty of how much has changed after Ukraine: pic.twitter.com/giGirqaYYP
— Joyce Karam (@Joyce_Karam) July 19, 2022
2020ஆம் ஆண்டு, எர்டகான் புடினை சந்திக்கச் சென்றபோது, அவரை சிறிது நேரம் காக்கவைத்தாராம் புடின்.
The National என்ற பத்திரிகையின் மூத்த செய்தியாளரான Joyce Karam என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், ’2020இல் ரஷ்யாவுக்குச் சென்ற எர்டகானை காக்கவைத்து அவமதித்த புடினை பழிவாங்க சரியான நேரம் எர்டகானுக்கு கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.