சந்தேக புத்தியால் நேர்ந்த விபரீதம்! பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்!
தனது சந்தேக புத்தியால் பச்சிளம் குழந்தையை குழந்தையின் தந்தையே கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட குழந்தை…
ரஞ்சித் குமார் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு என்கிற கிராமத்தை சேர்ந்தவராவார்.
24 வயதான இந்த நபர் 5 மாதத்திற்கு முன்னால் தனது முறைப்பெண்ணான கௌசல்யாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பு இவர்கள் நெருக்கமாக பழகியுள்ளனர்.
இதனால் கௌசல்யா திருமணத்திற்கு முன்பு கருவுற்றிருந்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை கௌசல்யா பெற்றுள்ளார்.
குழந்தை பிறந்து தனது தாய் வீ்ட்டில் கௌசல்யா இருந்துள்ளார்.
இவரை கடந்த ஒரு மாதம் முன்பு தான் ரஞ்சித் குமார் அழைத்துச்சென்றிருக்கிறார்.
அதன் பின் கௌசல்யாவிற்கு வேறு ஓருவரோடு தொடர்பு இருந்தது எனவும் நான் கறுப்பாக இருக்கிறேன் குழந்தை மட்டும் எப்படி வெள்ளையாக பிறந்தது என பிரச்சினை செய்துள்ளார்.
இதனால் கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு திரும்பவும் சென்றுள்ளார் கௌசல்யா,அங்கேயும் சென்று கதவை பூட்டி சண்டை போட்டுள்ளார் ரஞ்சித்.
சண்டை முற்றிய நிலையில் இந்த சத்தம் கேட்டு கதறி அழுத தனது 2 மாத பச்சிளம் குழந்தையை காலைப்பிடித்து சுவற்றில் அடித்துள்ளார்.
இதனால் முதுகு எலும்பு முறிந்து பரிதாபகரமாக குழந்தை இறந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மன்சேரி பொலிஸார் குழந்தையின் சடலத்தை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குழந்தையை கொலை செய்த ரஞ்சித் குமாரை பொலிஸார் கைது செய்தனர்.