நாளை மறுநாள் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23ஆம் திகதி உருவாக உள்ளது. இதன் காணமாக பல இடங்களில் அடுத்த வாரம் முதல் கன மழை பெய்யவுள்ளது.
மேலும் இந்த காற்றழுந்ந தாய்வு பகுதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.
இதனிடையே தற்போது உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குளிர்ந்த இரவு நாளாக இருக்கப்போவதாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை கடற்கரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிக கனமழை சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விருதுநகர், தேனி பகுதிகளிலும் கொஞ்சம் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 26 முதல் பரவலாக மழை பெய்யும் என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |