அசைவ உணவு சாப்பிடாத கிராமம்! தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா?
தமிழகத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் அனைவரும் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். இந்த தகவலை பற்றி கீழே பார்க்கலாம்.
எந்த கிராமம்?
தமிழக மாவட்டமான நீலகிரியில் உள்ள ஒரு கிராமத்தினர் அனைவரும் தங்களது முன்னோர்கள் பழக்கப்படுத்திய சைவ உணவை மட்டும் உண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கண்களை கவரும் இயற்கை, தேயிலை, மலைக் காய்கறிகள் என பல விடயங்கள் உள்ளன. இங்குள்ள பழங்குடி மக்கள் தங்களது முன்னோரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும், விநோதமான வழிபாட்டு நடைமுறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கக்குச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது தீனட்டி கிராமத்தில் உள்ள மக்கள் சைவ உணவை மட்டும் சாப்பிடுகின்றனர்.
இந்த கிராமத்தில் பசுமையான மலைகள், குழுமையான காலநிலை, தேயிலைத் தோட்டங்கள் என அமைதியே நிலவி வருகிறது. இந்த கிராம மக்கள் அசைவ உணவை புறக்கணித்துள்ளனர்.
குறிப்பாக, இங்குள்ள இளைஞர்களும் சைவ உணவையே எடுத்துக் கொள்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்களுடைய மூதாதையர் காலம் முதல் இன்றுவரை சைவ உணவையே உட்கொள்கிறோம்.
நாங்கள் சைவ உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறோம். எங்களுடைய கிராமத்தில் யாருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதில் இல்லை.
எங்களது வருங்காலத் தலைமுறைக்கும் சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ரசாயனத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்றாலும் சைவ உணவுப் பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்" என்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |