ரைஸ் குக்கரை திருமணம் செய்து நான்கு நாட்களில் விவாகரத்து பெற்ற வினோத நபர்! ஏன் தெரியுமா?
இந்தோனேசியாவில் ஒருவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து நான்கு நாட்களில் விவாகரத்து பெற்ற நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனாம். இவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் நடந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக மாற்ற திருமண ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் குக்கரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
ஆனால் 4 நாட்களுக்கு பிறகு தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அனாம் அறிவித்ததால் அவரது புதுமையான திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
பிரிவுக்கு காரணம் குறித்து அனாம் கூறியது, அவள் அரிசி சமைப்பதில் மட்டுமே வல்லவள். ஆனால் வேறு உணவுகளை அவளுக்கு சுவையாக சமைக்க தெரியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே இது போன்ற நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.