கர்ப்பமாக இருக்கும் குரங்குகளை வேட்டையாடிய நபர்: இன்று அவர் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை...
வயிற்றில் குட்டியுடன் இருக்கும் குரங்குகளைக் கூட விட்டுவைக்காமல் வேட்டையாடிய வேட்டைக்காரர் ஒருவர், அந்த விலங்குகளின் ஆவிகள் தற்போது தன்னைப் பழிவாங்குகின்றனவோ என பயந்துபோயிருக்கிறார்.
30 ஆண்டுகளாக விலங்குகளை வேட்டையாடியவர்
கானா நாட்டைச் சேர்ந்த Opanyin Yaw Sakyi, ஒரு வேட்டைக்காரர். தனது குடும்பத்துக்கு உணவளிப்பதற்காக விலங்குகளை வேட்டையாடி வந்து அவற்றை விற்பது அவருடைய தொழில் ஆகும்.
தனது 30 ஆண்டு வேட்டைத் தொழிலில், முள்ளம்பன்றிகள், மான்கள், குரங்குகள் முதலான விலங்குகளை வேட்டையாடியுள்ளார் Opanyin. அவர் வேட்டையாடும்போது வயிற்றில் குட்டியுடன் இருக்கும் சில குரங்குகளை அவர் கொன்றதுண்டாம்.
Image: KOFI TV / YouTube
பழிவாங்கும் விலங்குகளின் ஆவிகள்
தான் ஒரு சிறுவனாக இருந்தபோது வேட்டைக்குச் செல்லும் நாட்களிலேயே, காடுகளில் தீய ஆவிகளை நேருக்கு நேராக சந்தித்திருக்கிறாராம் Opanyin.
Opanyinக்கு எட்டு பிள்ளைகள். அவர்களில் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் உடற்குறைபாடுகள் உள்ளனவாம்.
தான் வயிற்றில் குட்டியுடன் இருக்கும் சில குரங்குகளைக் கொன்றதால்தான் தன் இரண்டு பிள்ளைகள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று எண்ணுகிறார் அவர்.
இதற்கிடையில், அவர்கள் இரண்டு பேரும் மனிதக் குழந்தைகளே இல்லையோ என சந்தேகப்படுகிறார் Opanyinஇன் மனைவி.
Image: KOFI TV / YouTube
காரணம், அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என்கிறார் Opanyinஇன் மனைவி. இரண்டு பேரும் மரம் ஏறுவதையும், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும் விதத்தையும் பார்த்தால், அப்படித்தான் தனக்குத் தோன்றுகிறது என்கிறார் அந்தத் தாய்.
சிறியவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனே பெரியவன் காட்டுக்குப் போய் ஒரு குறிப்பிட்ட மூலிகை இலைகளைக் கொண்டு வருவானாம். அவன் அதைத் தன் கைகளில் கொஞ்ச நேரம் சுருட்டி வைத்திருந்துவிட்டு, பின் அதைத் தன் தம்பி கைகளில் கொடுக்க, உடனே அவன் நலம்பெற்றுவிடுவான், அது என்ன இலை என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. அதை அவன் இரகசியமாக வைத்திருக்கிறான் என்கிறார் அவர்.