புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தல் முகாம்களுக்கு அனுப்ப திட்டம்: ஒரு திடுக் செய்தி
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தல் முகாம்களுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாடுகடத்தல் முகாம்களுக்கு அனுப்ப திட்டம்
ஐரோப்பா முழுவதுமே புலம்பெயர்வோருக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது போன்றதொரு விடயம் விரைவில் நடக்க உள்ளது போல் தோன்றுகிறது.
Credit: Getty
ஆம், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்கு வெளியே உள்ள நாடுகடத்தல் முகாம்களுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று இந்த விடயம் தொடர்பாக பல நாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையரான Ursula von der Leyen அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Credit: Alamy
புலம்பெயர்தல் விடயத்தில், வழக்கத்தை மீறி சிந்தித்து முடிவெடுக்கவேண்டும் என்று கூறியுள்ள அவர், புலம்பெயர்ந்தோரை அல்பேனியா நாட்டுக்கு அனுப்பத் துவங்கியுள்ள இத்தாலியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆக, இன்றைய சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள், புலம்பெயர்வோருக்கு கடினமான சூழலை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |