நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான மற்றொரு விமானம்! விமான நிலையத்தில் பரபரப்பு
ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த விமானம் மீது மற்றொரு விமானம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
Surgut விமான நிலையத்திலே இந்த விபத்து நடந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, சம்பவத்தின் போது UTair ATR-72 விமானத்தில் பராமரிப்பு பணி நடந்துக்கொண்டிருந்தது.
இதனால், விமானத்தின் இன்ஜின் செயலில் இருந்தது, திடீரென விமானம் நகர தொடங்கி நேராக நிறுத்தப்பட்டிருந்து SKOL Yak-40 மீது மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தின் போது விமானங்களில் யாரும் இல்லை, அதன் காரணமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
UTair ATR-72 collides with SKOL Yak-40 while undergoing engine runs at Surgut Airport, Russia. No injuries reported. https://t.co/xPNeGVHpfi pic.twitter.com/gPgOHmaImQ
— Breaking Aviation News & Videos (@breakingavnews) April 2, 2021
ஆனால், விமானம் பயங்கரமாக சேதமடைந்தது என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.