புடினுக்கு ஒரு இரகசிய காதலி... அந்தக் காதலிக்கு ஒரு காதலன்: அந்தக் காதலனை வலைவீசித் தேடும் புடின்!
புடினுக்கு திருமணமாகி மனைவி இருக்கும்போதே அவருக்கு ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறார்...
அவர்தான் ஒலிம்பிக் தங்க மங்கையான Alina Kabaeva (39). அந்த Alinaவுக்கு ஒரு காதலர் இருந்திருக்கிறார். அவரது பெயர் Colonel Shalva Museliana (52). அந்த Colonel Shalva, இந்த Alinaவைக் காதலிக்கும்போது அவருக்கும் திருமணமாகி ஒரு மகள் இருந்திருக்கிறார்.
இந்த Shalva, புடினை Alina சந்திக்கும் முன் அவரது காதலராக இருந்திருக்கிறார். அப்போது, Alinaவின் வாழ்வில் இருக்கும் ஒரே ஆண் நான்தான், இப்போதும் எப்போதும், என்று கூறியிருக்கிறார் Shalva. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிறகு Alina இந்த Shalvaவை பிரிய, அதற்குப் பிறகுதான் அவருக்கும் புடினுக்கும் இடையிலான இரகசிய உறவு தொடங்கியிருக்கிறது. அந்த நேரத்தில் புடினுக்கும் திருமணமாகி Lyudmila என்ற பெயருடைய மனைவி இருந்திருக்கிறார்.
சரி அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். அதனால்தானோ என்னவோ, எனது தனிப்பட்ட வாழ்வில் யாரும் தலையிட அனுமதிக்கமாட்டேன் என்று புடின் கூறியுள்ளாரோ என்னவோ?
இப்போது விடயத்துக்கு வருவோம்... Alinaவின் முன்னாள் காதலரான Colonel Shalvaவை இப்போது புடின் வலைவீசித் தேடி வருகிறாராம்.
அதாவது, இந்த Colonel Shalva மீது, அரசுப் பணத்தை அவர் திருடியதாக ரஷ்ய விசாரணை கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்கும் Shalva சிக்கினால், உடனடியாக ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்படுவார், சிறையில் அடைக்கப்படுவார்.
பல்கலைக்கழகத்தில் பயின்ற நாள் முதல், புடினுடைய வகுப்புத் தோழனாக இருக்கும் ஒருவர்தான் இப்போது Shalvaவைத் தேடும் ரஷ்ய விசாரணை கமிட்டியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.