சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து.., 2 பேர் பலி
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயதான தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து
சென்னை வளசரவாக்கத்தில் சவுத்ரி நகரில் உள்ள பங்களா வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டில் இருந்த வயது முதிர்ந்த தம்பதி சிக்கி பலியாகி உள்ளனர்.
அவர்கள் நடராஜன் (70) மற்றும் அவருடைய மனைவி தங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் அந்த வீட்டில் இருந்த அவர்களின் மகன் ஸ்ரீராம் என்பவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்த பணிப்பெண் எலும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |