ஒரு மலை முழுக்க தங்கம்! தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்
காங்கோ நாட்டின் தெற்கு Kivu மாகாணத்தில் உள்ள Luhihi கிராமத்தில் ஒரு மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது.
இதனை அறிந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல அவரவர் விருப்பம் போல மலையை வெட்டி குடைந்து எடுத்துள்ளனர்.
கடப்பாரை, மண்வெட்டி என ஆயுதங்களை எடுத்துவந்த மக்கள், கையில் கிடைக்கும் கற்கள், மணல் என அனைத்தையும் முடிந்தவரை அள்ளி வீட்டுக்கு எடுத்துசென்றுள்ளனர்.
விவரம் அறிந்து வந்த அரசு அதிகாரிகள், மக்களை அப்பகுதியிலுருந்து கலைத்து, தங்க சுரங்கத்தை தோண்டுவதற்கு தடை விதித்துள்ளது.
The moment of washing the dirt and extracting the gold. #Congo pic.twitter.com/7L1V1Clm30
— Ahmad Algohbary (@AhmadAlgohbary) March 2, 2021
அந்த மலை கிட்டத்தட்ட 60% முதல் 90% வரை தங்கத்தால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் மற்றும் தங்கத்தை பிரித்தெடுக்கும் வினோதமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பயவிவருகிறது