பிரான்சில் ரயிலில் அருகில் அமர்ந்திருந்த பெண்... மாயமான சூட்கேஸ்: பின்னர் தெரியவந்த உண்மை
பிரெஞ்சு நகரங்கள் பலவற்றில், ரயில்களில், பெண் போல் உடையணிந்து ஏமாற்றும் ஒரு கும்பல் சிக்கியுள்ளது.
அவர்களிடமிருந்து 300,000 யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெண் போல் உடையும், விக்கும் (wig) அணிந்து, நாட்டைக் கடந்து செல்லும் அதிவேக ரயில்களில் ஏறுகிறார்கள் சில பெண்கள்.
முதல் வகுப்பில் சென்று அமர்ந்துகொள்ளும் இந்தப் பெண்கள், ரயில் நிறுத்தங்களில் ரயில் நிற்கும்போது பயணிகள் புகை பிடிக்கவோ, அல்லது சற்று நேரம் நிற்பதற்காகவோ ரயிலை விட்டிறங்கும் நேரத்தில் அவர்களுடைய உடைமைகளுடன் தப்பி விடுவார்களாம் இந்தப் பெண்கள்.
[#Interpellations] Les #policiers des Bouches-du-Rhône ont mis fin à un réseau de vol des voyageurs TGV de 1ère classe entre #Nice et #Marseille.
— Police nationale (@PoliceNationale) September 16, 2022
?4 mois d’enquête
?300 000€ de butin retrouvé (montres, bijoux, valises, appareils photo...)
?3 individus interpellés@PoliceNat13 pic.twitter.com/nFTxZqBfkd
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தொடர்ந்து இவ்வகைத் திருட்டுக்கள் நடந்துவந்த நிலையில், சமீபத்தில் பிரான்சில் ஒரு பெண் சிக்கினார்,
விசாரணையின்போது, அவர் பெண்ணே அல்ல என்பது தெரியவந்தது. அதாவது பெண் போல உடையும், விக்கும் அணிந்து இதுவரை திருடிவந்துள்ளார்கள் அந்த 57 வயது நபரும், அவரது கூட்டாளிகளான, முறையே 47 மற்றும் 40 வயதுள்ள இருவரும்.
அவர்களிடமிருந்து 300,000 யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.