தற்கொலை செய்துகொண்ட ஹிட்லரின் மறுபிறவி நான்: தழும்பை ஆதாரமாக காட்டும் இளைஞர்
இளைஞர் ஒருவர், தன்னை ஹிட்லரின் மறுபிறவி என்று கூறிக்கொள்கிறார்.
தழும்பை ஆதாரமாக காட்டும் இளைஞர்
Felix Cipher என்னும் இளைஞர், கடந்த சில வாரங்களாக நாஸிக்களின் உடைகளை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், தான் ஹிட்லரின் மறுபிறவி என தற்போது கூறியுள்ளார் Felix.
தனது நெற்றிப்பொட்டில் காணப்படும் அடையாளம் ஒன்றைக் காட்டி, அது, தான் முற்பிறவியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டபோது குண்டு பாய்ந்ததன் அடையாளம் என அவர் கூறுகிறார்.
Image: Tiktok/meganisadumpsterfire
தாயும் மறுபிறவிதானாம்
அத்துடன், தன்னுடைய தாயாரும், முந்தைய பிறவியில் ஹிட்லரின் தாயாகிய க்ளாராவாகப் பிறந்தவர் என்றும் கூறிவருகிறார் Felix.
விடயம் என்னெவென்றால், ஹிட்லர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. அவர் மற்ற நாஸித்தலைவர்களைப்போல அர்ஜென்டினாவுக்கு ஓடிப்போயிருக்கலாம் என்ற கருத்து இன்றும் நிலவுகிறது.
Image: Corbis via Getty Images
Image: Tiktok/meganisadumpsterfire