Contact Lens அணிந்தவாறு உறங்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி
ப்ளோரிடாவில் 21 வயது இளைஞர் ஒருவர் Contact Lens (கான்டக்ட் லென்ஸ்) அணிந்தவாறு உறங்கியதன் விளைவாக ஒரு கண்ணை இழக்க நேரிட்டுள்ளது.
மைக் குரூம்ஹோல்ஸ் (Mike Krumholz) என்ற இளைஞரை இவ்வாறு கண்களை இழந்துள்ளார்.
கடின உழைப்பு மிகுந்த நாளொன்றின் உடல் அயற்சி காரணமாக உறங்கச் சென்றதாக மைக் தெரிவிக்கின்றார்.
துரதிஷ்டவசமாக தான் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றாமல் உறங்கியதாக அவர் தெரிவிக்கின்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதாகவும் அவரது கண்களுக்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டது இல்லை எனவும் தெரிவிக்கின்றார்.
சில சந்தர்ப்பங்களில் லென்ஸை அகற்றாமல் உறங்கிய போது சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டதுண்டு எனவும் அவர் கூறுகின்றார்.
எனினும் இந்த தடவை ஒரு கண்ணை இழக்கவே நேரிட்ட பரிதாபம் உருவாகியுள்ளது.
அக்கன்தாமோபா கிராடிடிஸ் (acanthamoeba keratitis) என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் அவரது ஒரு கண் இழக்க நேரிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிய வகையிலான ஓர் ஒட்டுண்ணி அவரது கண்ணை சாப்பிட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காண்டாக்ட் லென்ஸ் அணிந்ததன் காரணமாக ஏற்பட்ட கண் உபாதையில் காரணமாக உருவாகிய இந்த ஒட்டுண்ணி ஒரு கண்ணையே உணவாக உட்கொண்டு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு ஏற்பட்டதை போல் வேறு எவருக்கும் இவ்வாறான ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் அவர் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றார்.
இதற்காக அவர் நிதியும் திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.