பாஸ்போர்ட் உட்பட 9 ஆவணங்கள்..ஆதார் தொடர்பில் புதிய காலக்கெடு நீட்டிப்பு
ஆதார் அட்டையில் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் இலவசமாக 9 ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான புதிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 14ஆம் திகதிக்குள் மட்டுமே ஆதார் அட்டையில் ஆவணங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த காலக்கெடுவானது சூன் 14ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாஸ்போர்ட் உட்பட 9 ஆவணங்களை ஆதாரில் பதிவேற்றம் செய்ய UIDAI பட்டியலிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி முன்னரே கூறியபடி சூன் 14ஆம் திகதி வரை மட்டுமே ID Proof மற்றும் Address Proof ஆவணங்களை இலவசமாக Upload செய்துகொள்ள முடியும்.
சூன் 15ஆம் திகதிக்கு மேல் Upload செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
UIDAI வெளியிட்டுள்ள 9 ஆவணங்களின் பட்டியல்:
- கடவுச்சீட்டு (Passport)
- பான் அட்டை (Pan Card)
- குடும்ப அட்டை (Ration Card)
- வாக்காளர் அடையாள அட்டை (Voter Identification Card)
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- இந்திய அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள்
- Job card of MG-NREGS
- SGHS photo identity card
- வருமான வரியின் மதிப்பீடு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |