2024 ஜனவரி 1 முதல் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள்., அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்
இந்த வருடம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டு வரும்போது, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகளை முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள்.
வாழ்க்கையைப் போலவே, புத்தாண்டு நிதித் துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அன்றாட வாழ்க்கை தொடர்பான பொருளாதார மாற்றங்கள் பெரும்பாலும் மக்களை பாதிக்கின்றன.
ஜனவரி 1 முதல் நிதித்துறையில் நடக்கும் சில மாற்றங்கள்..
Bank Locker Agreements
டிசம்பர் 31ம் திகதிக்குள் கணக்கு வைத்திருப்பவர் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் (Bank Locker Agreements) கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் லாக்கர் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி (RBI) எச்சரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ம் திகதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
புதிய SIM Card
புதிய தொலைபேசி இணைப்பு தேவைப்படுவோர் ஜனவரி 1ஆம் திகதி முதல் புதிய சிம்கார்டுக்கு காகிதம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 முதல் Paperless KYC முறை அமல்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
Aadhaar Details Update
ஆதார் விவரங்களை ஓன்லைனில் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2023 ஆகும். இந்த அடையாள ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் ரூ. 50 வசூலிக்கப்படும்.
Canada Study
ஜனவரி 1ம் திகதி முதல் கனடாவுக்கு மேற்படிப்புக்காக செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் செலவு அதிகரிக்கும். இது இந்திய மாணவர்களுக்கும் பொருந்தும்.
வாழ்க்கைச் செலவு தொடர்பான திருத்தப்பட்ட நிதி தேவை அளவுகோல்கள் ஜனவரி 1 முதல் கனடாவில் நடைமுறைக்கு வரும். இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு தொகையை கையில் வைத்திருக்க வேண்டும்.
பயணம் மற்றும் கல்விக் கட்டணம் செலுத்துவதுடன், வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான நிதித் தேவை அளவுகோல்களில் மாணவர்களுக்கு 20,635 கனேடிய டொலர்கள் தேவைப்படுகிறது.
Demat Nominee Update
பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டிய விடயம் இது. டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜனவரி 1ஆம் திகதிக்குள் பயனாளியின் (Nominee) பெயரைத் தெரிவிக்க வேண்டும் என்பது SEBIயின் நிபந்தனை.
இல்லையெனில், அவர்கள் Nomineeல் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் முதலீட்டைத் திரும்பப் பெறுவது கடினமாகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Demat Nominee Update, Canada Study, Aadhaar Details Update, Bank Locker Agreements, SIM Card, 2024 January 1 Changes in India