அனைவரும் நடுங்கும் வகையில் வந்து ரன் எடுங்கள் ரிஷாப் பண்ட்: இந்திய அணியின் முன்னாள் வீரர்
ரிஷாப் பண்ட் வலியான வீரர் என்றும், அவர் மீண்டும் வந்து அதிரவிட வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ரிஷாப் பண்ட்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், ரிஷாப் பண்ட் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
எனினும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் தனது அதிரடி ஆட்டத்தினால் மிரள வைப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் ரிஷாப் பண்ட்டின் துடுப்பாட்டம் குறித்து இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுடன் போட்டியிட வேண்டியதில்லை
அவர் கூறுகையில், "ரிஷாப் பண்டிற்கு ஒரு பெரிய வாய்ப்பு. தற்போது டி20 அணியின் ஒரு பகுதியாக இல்லை. அவர்களின் திட்டத்தில் கூட அவர் இல்லை. ஆனால், இவ்வளவு வலிமையான வீரர் டி20 போட்டிகளில் ஏன் சீரான ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
எனவே, இது உங்கள் சீசன் சார். அனைவரும் நடுங்கும் வகையில் வந்து இவ்வளவு ஓட்டங்கள் குவித்து விடுங்கள். பண்ட் எங்கு துடுப்பாட்டம் செய்வார் என்பது ஒரு கேள்வியாக இருக்கும்.
கீப்பர்கள் அங்கு துடுப்பாட்டம் செய்யும்போது, அவர் தொடக்க வீரர் என்று நிறைய விவாதங்கள் உள்ளன. நீங்கள் சஞ்சு சாம்சனுடன் போட்டியிட வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் சொந்த இடத்தை சரியாக உருவாக்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |