ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தந்தை சிதைக்கு தீவைக்கும் முன்னரே மோசமாக விமர்சிக்கப்பட்ட 17 வயது மகள்! மீண்டு வந்து தந்த பதில்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உயிரிழந்த நிலையில் அவரின் மகள் ஆஸ்னா லிடர் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தை ஆக்டிவேட் செய்துள்ளதுடன் முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டு பலரின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேருடன் சேர்ந்து உயிரிழந்தார் பாதுகாப்பு உதவியாளராக இருந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டர்.
இவரின் மகள் ஆஸ்னா லிடர் (17). தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு தீ வைப்பதற்கு முன்னரே இவர் இணையவாசிகளால் மோசமான வசைப்பாடப்பட்டார்.
ஏனெனில், ஆஸ்னா முன்னர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவை எடுத்த வலதுசாரி ஆதரவாளர்கள் ஆஸ்னாவை மோசமாக ட்ரோல் செய்து விமர்சித்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்த சூழலில் தான் தனது டுவிட்டர் கணக்கை அவர் மூடினார். தொடர்ந்து ஆஸ்னா மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்கள் காரணமாக அவர் டுவிட்டர் கணக்கை மூடினார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்னா தற்போது மீண்டும் டுவிட்டர் கணக்கை தொடங்கியிருக்கிறார், இதோடு தான் எதற்காக டுவிட்டரில் இருந்து வெளியேறினேன் என்ற விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அவரின் பதிவில், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், கவனச்சிதறல் இல்லாமல் இருக்கவும் தான் என் டுவிட்டர் கணக்கை டி ஆக்டிவேட் செய்து அதிலிருந்து வெளியேறினேன் என தெரிவித்துள்ளார்.
Gratitude surges through me as I thank the nation for mourning the loss of my father with us... The biggest consolation I have is it, isn't my loss alone, it's our loss.
— Aashna Lidder (@AashnaLidder) December 17, 2021
Had de-activated my twitter on my own, to spend time with family and away from any distraction.