தாலிபான்களால் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்
காபூல் விமான நிலையத்திற்கு அருகே வைத்து கடத்தப்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 150 பேரின் நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி காலை Hamid Karzai சர்வதேச விமான நிலையத்திற் அருகே வைத்து இந்தியர்கள் உட்பட 150 பேரை தலிபான்கள் கடத்தியதாக Kabul Now செய்தி வெளியிட்டது.
ஆனால், போராளிகள் யாரையும் கடத்தவில்லை என தலிபான் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி Kabul Now செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்களை கடத்திச் சென்றவர்கள் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கி அவற்றை சரிபார்த்து விசாரணை செய்தனர்.
கடத்தப்பட்ட அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கேரேஜில் இருக்கிறார்கள்.
கடத்தப்பட்ட அனைவரையும் மீண்டும் காபூல் விமான நிலையத்தில் விட்டு விடுவோம் என கடத்தல் காரர்கள் சொன்னதாக நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி Kabul Now செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கடத்தப்பட்ட இந்தியர்கள் உட்பட அனைவரையும் தலிபான்கள் விடுவித்து விட்டதாகவும், அனைவரும் தற்போது காபூல் விமானத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.