சிறையில் இருந்து வந்த 10 நாட்களில் அணியில் இடம் பிடித்த IPL வீரர்
abishek porel in bengal squad 10 days after bail: சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த 10 நாட்களில் அபிஷேக் போரெல், ரஞ்சி கிண்ணத்திற்கான பயிற்சி அணியில் இடம் பிடித்துள்ளார்.
சிறையிலிருந்து வந்த 10 நாட்களில் அணியில் இடம்
மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், அபிஷேக் போரெல் தன்னை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாவும், தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆகஸ்ட் 11 ஆம் திகதி அபிஷேக் போரெலை கைது செய்தனர்.
ஒரு மாதமாக சிறையில் இருந்த அவருக்கு, செப்டம்பர் 18 ஆம் திகதி சின்சுரா நீதிமன்றம் பிணை வழங்கியது.
சிறையில் வெளியே வந்த 10 நாட்களில், 2026-2027 ரஞ்சி கிண்ணத்திற்கான பயிற்சி அணியில், மேற்கு வங்க அணியில் அபிஷேக் போரெல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6 ஆம் திகதி குவஹாத்தியில் நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் அபிஷேக் போரெல் களமிறங்க உள்ளார்.
2026-2027 ரஞ்சி கிண்ண தொடர் 11 அக்டோபர் 2026 அன்று தொடங்கி, 23 மார்ச் 2027 வரை நடைபெற உள்ளது.