ஆபிரகாம் லிங்கன் ஓரின சேர்க்கையாளரா? வெளியான ஆவணப்படம்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஓரின சேர்க்கையாளர் என புதிய ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
'Lover of Men: The Untold History of Abraham Lincoln' என்ற இந்த ஆவணப்படத்தில், ஆண்களுடனான லிங்கனின் காதல் உறவுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
பிரபல லிங்கன் அறிஞர்கள் கூறிய விடயங்கள், இதுவரை வெளிவராத புகைப்படங்கள், கடிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.
ஹார்வர்ட், கொலம்பியா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் வரலாற்றாசிரியர்களின் நேர்காணல்கள் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
19-ஆம் நூற்றாண்டில் பாலியல் விதிமுறைகள் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? ஆகிய புள்ளிகள் அதில் விளக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Abraham Lincoln was a lover of men, new documentary, Abraham Lincoln gay, Lover of Men: The Untold Story of Abraham Lincoln