30 பாடசாலை மாணவர்களை பகிரங்கமாக சுட்டுக்கொன்ற சர்வாதிகாரி
வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார அரசு 30 மைனர் மாணவர்களை பகிரங்கமாக சுட்டுக் கொன்றதாக்க செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரியன் ட்ராமா அல்லது K-Drama என்று அழைக்கப்படும் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட தொடர்களைப் பார்த்த குற்றச்சாட்டின் பெயரில் இந்த மாணவர்கள் தண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்ததாக்க கூறப்படும் நிலையில், அதன் விவரங்கள் இப்போது கொரிய செய்தித்தாளான Korea JoongAng Daily மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தென் கொரியாவின் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான Chosun TV-படி, மாணவர்கள் பென் டிரைவில் சேமிக்கப்பட்ட பல தென் கொரிய நாடகங்களைப் பார்த்துள்ளனர்.
இந்த பென் டிரைவ்கள் கடந்த மாதம் சியோலில் இருந்து பலூன்கள் மூலம் வடகொரியாவிற்கு அனுப்பப்பட்டது.
ஜப்பானிய, கொரிய மற்றும் அமெரிக்க நாடகங்களுக்குத் தடை
வடகொரியாவில் ஜப்பானிய, கொரிய மற்றும் அமெரிக்க நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சினிமா அல்லது வடகொரிய அரசாங்கம் சரியானது என்று கருதுவது மட்டுமே அங்கு காட்டப்படுகிறது.
2020 டிசம்பரில் நடைமுறைக்கு வந்த வட கொரியாவின் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சார நிராகரிப்புச் சட்டத்தின் கீழ், தென் கொரிய ஊடகங்களைப் பரப்புவோருக்கு மரண தண்டனை மற்றும் அதைப் பார்ப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
புத்தகங்கள், பாடல்கள் மற்றும் புகைப்படங்களும் இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விதியின் கீழ், தென் கொரிய மொழி மற்றும் பாடும் பாணியைப் பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு கொத்தடிமையாக வேலைபார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
North Korea executed 30 teenagers for watching K-drama, South Korean Drama, North Korea, Kim Jong Un