உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது.
உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை
கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளது.
முதலில் அதன் தலையை உருகியது, அடுத்து அதன் கால்கள் உடற்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது மற்றும் வலது காலும் உருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர் சாண்டி வில்லியம்ஸ் IV உருவாக்கிய வெள்ளை மெழுகு சிலை, இந்த ஆண்டு பிப்ரவரியில் வடமேற்கு வாஷிங்டனில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் வளாகத்தில் வெளிப்புறத்தில் நிறுவப்பட்டது.
Maybe a wax Lincoln sculpture wasn’t the best idea during DC’s first week of summer heat pic.twitter.com/qfp0lIGFWo
— Kirk A. Bado (@kirk_bado) June 23, 2024
அமெரிக்க வெப்ப அலை
அமெரிக்காவின் பல பகுதிகள் தீவிர வெப்பநிலையை ஏற்பட்டு வருகிறது.
வானிலை முன்னறிவிப்பாளர்கள் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை இந்த மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |