அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்.., பிரம்மிக்கவைக்கும் புகைப்படங்கள்
அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
முதல் இந்து கோயில்
அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.
ABUDHABIMANDIR Instagram
இந்த கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பின்னர், சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
ABUDHABIMANDIR Instagram
இந்த கோயிலானது 32.92 மீட்டர் உயரம், 79.86 மீட்டர் நீளம் மற்றும் 54.86 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது .
ABUDHABIMANDIR Instagram
Dome of Harmony' என்பது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 1500 கைவினை கலைஞர்கள் இந்த கோவிலின் சிலைகளை செதுக்கியுள்ளனர்.
ABUDHABIMANDIR Instagram
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.
ABUDHABIMANDIR Instagram
ABUDHABIMANDIR Instagram
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |