திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்ட மணமக்கள்: அடுத்து நடந்த பயங்கரம்
அமெரிக்காவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வாகனம் ஒன்றில் புறப்பட்ட மணமக்கள், சிறிது நேரத்தில் அதீத வேகத்தில் கார் ஓட்டிய பெண் ஒருவரால் பயங்கர விபத்தொன்றில் சிக்கினர்.
திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்ட மணமக்கள்
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் திருமண வரவேற்பு முடிந்து, உறவினர்களுக்கு முகம் நிறைய புன்னகையும், மனம் நிறைய மகிழ்ச்சியுமாக விடைகொடுத்துவிட்டு, வாகனம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர் புதுமணத் தம்பதியரான சமந்தாவும் (Samantha Hutchinson, 34) ஆரிக்கும் (Aric Hutchinson, 36). அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று புதுமணத் தம்பதியர் பயணித்த வாகனத்தின் பின்னால் வந்து மோதியுள்ளது.
Image: GoFundMe/Folly Beach Police/MEGA
அந்த காரை ஓட்டியவர் ஜேமி (Jamie Komoroski, 25) என்னும் பெண். மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய இடத்தில் அந்தப் பெண் 104 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளார். அந்தப் பெண் மதுபானமும் அருந்தியுள்ளார்.
துவங்குவதற்கு முன்பே முடிந்த திருமண வாழ்வு
இந்த பயங்கர விபத்தில் சமந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஆரிக் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Picture: Facebook
அவரது உடலில் பல எலும்புகள் உடைந்துள்ளதுடன், அவரது மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோகம் என்னவென்றால், தன் மனைவி சமந்தா உயிரிழந்தது ஆரிக்குக்கு தெரியுமா தெரியாதா என்பதே தெரியவில்லை.
அத்துடன், புதுமணத் தம்பதியருடன் பயணித்த உறவினர்கள் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. திருமண வாழ்வு துவங்குவதற்கு முன்பே, சமந்தாவின் வாழ்வே முடிந்துவிட்டது.
Image: AP
கார் மோதி விபத்தை உண்டாக்கிய ஜேமி கைது செய்யப்பட்டுள்ளார். சமந்தா கொல்லப்பட்டதற்காக அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25,100 டொலர்கள் அபராதமும், மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தியதற்காக 15 ஆண்டுகள் சிறையும் 10,100 டொலர்கள் அபராதமும், குடித்துவிட்டு தாறுமாறாக வாகனம் ஓட்டி ஒருவரை பலிகொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறையும் 5,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.